என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
இயம்பலாகாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
1.
கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்!
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம் – என்ன என் ஆனந்தம்!
2.
பாவங்கள், சாபங்கள், கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே – என்ன என் ஆனந்தம்!
3.
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் சுவாமி பற்றியே சாட்சி
பகீரவேண்டியதே – என்ன என் ஆனந்தம்!
4.
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வட்டில்
ஜெயக்கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் ஸ்தோத்தரிப்போம் – என்ன என் ஆனந்தம்!
enna en aananthdham! enna en aananthdham!
iyampalakathe
mannan kirisuthu en pavaththai ellam
manniththu vittare
1.
kuduvom aaduvom paduvom nandray
makizh kondaduvom!
nadiye nammaith thediye vanthdha
nadhanaib potrriduvom – enna en aananthdham!
2.
pavangkal, sapangkal, kopangkal ellam
parikariththare
thevathi thevan en ullaththil vanththu
thetrriye vittare – enna en aananthdham!
3.
adchayan padchamay iradsibbai engkalukku
arulinathale
nischayam suvami parriye sadsi
pakaravendiyathe – enna en aananthdham!
4.
vennangki ponmudi vaththiyam melveetil
jayakkodiyutane
mannulakil vanththu vinnulakil sendra
mannanaith sthothdharippom – enna en aananthdham!